‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் ஓடும் கழிவுநீர்
தஞ்சை பாலோபநந்தவனம் பிள்ளையார்கோவில் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கழிவுநீர் சாலையில் தேங்கி விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பை சரிசெய்து சாலையில் கழிவு நீர் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், பாலோபநந்தவனம்.
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே ஆலடிக்குளம் ஒத்தையடி சாலையில் மழைத்தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருக்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதன் வழியாக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ -மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அபுபக்கர், அதிராம்பட்டினம்.
ஆபத்தான பயணம்
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் சோழபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக செல்லும் தனியார் பஸ்களில் அதிகமாக பயணிகளை ஏற்றி வருகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் தொங்கி கொண்டு செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
-ஜெய்கணேஷ், சோழபுரம்.
Related Tags :
Next Story