காரியாபட்டி பகுதியில் வளர்ச்சி பணிகள்
காரியாபட்டி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சாலை வசதி
முன்னேற விழையும் மாவட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில், மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், மத்திய பொறுப்பு அலுவலருமான ஜெயா கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது திறன் மேம்பாடு, சாலை வசதி, குடிநீர், ஊரக மின் வசதி, தனிநபர் இல்லக்கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் சத்திரம்புளியங்குளம் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, குடிநீர் வழங்கும் பணியினை ஆய்வு செய்தார்.
மரக்கன்றுகள்
அல்லாளப்பேரி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீட்டினையும், செட்டிக்குளம் ஊராட்சியில், பசுமை விடியல் திட்டத்தின் கீழ் 20 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர் பார்வையிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கைமார்பன், கவிதா ராம்பிரசாத், பிரபா சிவகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story