புலிக்குட்டை அரசு நடுநிலைப்பள்ளியில்மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு
புலிக்குட்டை நடுநிலைப்பள்ளியில் கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்
புலிக்குட்டை நடுநிலைப்பள்ளியில் கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
`நம் பள்ளி நம் பெருமை' எனும் திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு சார்பாக கந்திலி ஊராட்சி புலிக்குட்டை நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சிவலிங்கம் தலைமை வகித்தார். ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மாலா, சரவணன், விஜயலட்சுமி ஆகிேயார் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக பூ.மாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் டி.வேதபிரகாஷ் கந்திலி வட்டார கல்வி அலுவலர் எஸ்.திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அதற்கான சான்றிதழை வழங்கினர். கூட்டத்தில் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் உதவி ஆசிரியர் சண்முகம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story