தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 24 April 2022 1:18 AM IST (Updated: 24 April 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

சாத்தூர், 
சாத்தூர் தாலுகா கீழஓட்டம்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும், இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இ்ந்தநிலையில் அவர் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பன்னீர்செல்வத்தின் மகன் சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story