பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த வாலிபருக்கு வலைவீச்சு
பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வீரய்யா(வயது 23). இவருக்கு வேறு சமுதாயத்தை சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணுடன் பழக்கம் இருந்து வந்தது. அந்த பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் அவருடைய கணவர் வெளிமாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பெண் தனது கணவர் ஊருக்கு வர இருக்கிறார் என்று வீரய்யாவிடம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் ஏற்கனவே வீரய்யா அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்துபோது செல்போனில் எடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகளை, அவர் தற்போது அந்த பெண்ணிடம் காண்பித்து தகாத உறவுக்கு அழைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தகாத வார்த்தைகளால் திட்டுதல், பெண்ணை மானபங்கப் படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான வீரய்யாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story