சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டம்
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாக 12 பேரை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் 12 பேரில் ஒருவரான செந்துறை தாலுகா சித்துடையார் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கண்ணன் என்ற கந்தசாமி (வயது 45), சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தனது தங்கும் விடுதியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கந்தசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ரமணசரஸ்வதி, குண்டர் சட்டத்தில் கந்தசாமியை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கந்தசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆவணங்களை திருச்சி மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story