கல்லூரி மாணவர் போக்சோவில் கைது


கல்லூரி மாணவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 24 April 2022 1:39 AM IST (Updated: 24 April 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

குன்னம்:

கல்லூரி மாணவர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சுள்ளங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் வசந்த் (வயது 19). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அழகு கலை பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 17 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற அந்த மாணவி வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்று மாணவியின் தந்தை குன்னம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குன்னம் போலீசார் விசாரணை நடத்தினர்.
போக்சோவில் கைது
இதில் அந்த மாணவியை, வசந்த் கடத்திச்சென்றது போலீசாருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வசந்த் மற்றும் அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வசந்தை கைது செய்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

Next Story