நூலகத்தில் புத்தக தின விழா


நூலகத்தில் புத்தக தின விழா
x
தினத்தந்தி 24 April 2022 1:39 AM IST (Updated: 24 April 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

நூலகத்தில் புத்தக தின விழா நடந்தது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் ஜெயங்கொண்டம் முழுநேர கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமார் தலைமை தாங்கினார். நூலகர் கொளஞ்சிநாதன் வரவேற்று பேசினார். சின்னவளையம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பா முன்னிலை வகித்து பேசினார். சமூக ஆர்வலர் சண்முகம் வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி பேராசிரியர் சிவராமன் கலந்து கொண்டு பேசினார். விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப்போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதில் 210 உறுப்பினர்கள், 2 புரவலர்கள் சேர்க்கப்பட்டனர். முடிவில் நூலகர் கயல்விழி நன்றி கூறினார்.

Next Story