முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்


முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
x

முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாலக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் நகர, பேரூர், வார்டு கழக தேர்தல் பொறுப்பாளர் ராஜகாந்தம் பேசினார். தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட கட்சியின் நகர, பேரூர், வார்டு கழக தேர்தலை பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர் பகுதியில் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைக்க ரூ.150 கோடியும், எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலை வளர்ச்சி மேம்பாட்டுக்கு ரூ.7 கோடியும், வெள்ளாற்றை மையமாக கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டம் 15 ஊரக பகுதிகளில் அமைக்க ரூ.11.75 கோடியும், கோனேரிபாளையம் கிராமத்தில் கோனேரி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை அமைக்க ரூ.4 கோடியும் என மொத்தம் ரூ.172.75 கோடிக்கு திட்டங்களை அறிவித்த முதல்-அமைச்சருக்கும், தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பரிந்துரை செய்த பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story