அரசு நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்


அரசு நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்
x
தினத்தந்தி 24 April 2022 1:40 AM IST (Updated: 24 April 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

அரசு நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுவிற்கு தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஒட்டக்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், பள்ளி மேலாண்மை குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பெற்றோரும், தங்களது குழந்தைகள் பயிலும் பள்ளியின் முன்னேற்றத்திற்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க, நினைத்ததை செயல்படுத்த, ஒரு வாய்ப்பை தமிழக அரசு தற்போது ஏற்படுத்தியுள்ளது. இதனை பெற்றோர் உரியமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சுய விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, பொதுநோக்குடன் இத்திட்டத்தை எடுத்து செல்ல வேண்டும், என்றார்.
இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story