ஒலி மாசு ஏற்படுத்தியதாக பெங்களூருவில் 300 மசூதிகளுக்கு நோட்டீசு
ஒலி மாசு ஏற்படுத்தியதாக பெங்களூருவில் 300 மசூதிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், தொழிற்சாலைகளில் ஒலி மாசுபாட்டை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து பெங்களூருவில் ஒலி மாசு ஏற்படுத்தும் கோவில்கள், மசூதிகளுக்கு போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். பெங்களூரு பசவனகுடியில் உள்ள தொட்டகணபதி கோவிலுக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள மசூதிகளில் ஒலி மாசுபாட்டை அதிகரிக்கும் வகையில் அதிக சத்தத்துடன் தொழுகை நடப்பதாக கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் பெங்களூருவில் 300 மசூதிகளுக்கு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர். இதுதவிர ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தியதாக லக்கரேயில் உள்ள ஒரு தேவாலயத்திற்கும் நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story