போதைப்பொருள் விற்ற 6 பேர் கைது


போதைப்பொருள் விற்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 24 April 2022 1:47 AM IST (Updated: 24 April 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்

நெல்லை:
பாளையங்கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த சுதன் (வயது 31), வி.எம்.சத்திரம் ரகுராமன் (46) ஆகியோரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 160 கிராம் எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது.
நெல்லை மாநகர தனிப்படை போலீசார் மாநகரம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை செய்வதை தடை செய்வதற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நெல்லை பழைய பேட்டை பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கண்டியபேரியை‌ சேர்ந்த முத்து சேகர் (38) சங்கர் (29) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 200 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் சங்கர்நகர் ஐயப்பன் (52) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 120 கிராம் போதைப்பொருளையும், ரெட்டியார்பட்டி சங்கர் (33) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 700 கிராம் போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story