தனியார் பங்குகளில் பஸ்களுக்கு டீசல் நிரப்புவதால் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.22½ கோடி மிச்சம்
தனியார் பங்குகளில் பஸ்களுக்கு டீசல் நிரப்புவதால் கர்நாடக அரசு போக்குவரத்துக்கு கழகத்துக்கு ரூ.22.50 கோடி மிச்சமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்க கூட முடியாத நிலை இருக்கிறது. இதையடுத்து, கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடக அரசு பனிமனைகளில் இருக்கும் பெட்ரோல் பங்குகளுக்கு பதிலாக தனியார் பெட்ரோல் பங்குகளில் சில்லரைக்கு அரசு பஸ்களில் டிரைவர்கள் டீசல் நிரப்பி வருகிறார்கள்.
இவ்வாறு தனியார் பெட்ரோல் பங்குகளில் பஸ்களுக்கு டீசல் நிரப்புவதன் மூலம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.22½ கோடி மிச்சமாகி இருக்கிறது. அதாவது மாதத்திற்கு ரூ.22½ கோடி கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு லாபம் கிடைப்பதாகவும், இதன்மூலம் பெருமளவு நஷ்டத்தில் இருந்து போக்குவரத்து கழகம் மீண்டு வருவதாகவும் டிரைவர்கள், கண்டக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் பெட்ரோல் பங்குகளில் சில்லரை விலைக்கே பஸ்களில்டீசல் போட முடிவு செய்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story