நெல்லை சரகத்தில் 23 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
நெல்லை சரகத்தில் 23 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
நெல்லை:
நெல்லை சரகத்தில் 23 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்
நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜென்சி சேரன்மாதேவி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், தூத்துக்குடி தெற்கு கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனிஸ் ஜேசுபாதம் தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அம்பை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், குற்றாலம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் முறப்பநாடு போலீஸ் நிலையத்திற்கும், சிவந்திப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.எஸ்.சாந்தி ஐ.யூ.சி.ஏ.டபிள்யூவுக்கும், ஐ.யூ.சி.ஏ.டபிள்யூ. வி.சாந்தி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கயற்கண்ணி தென்காசி மாவட்ட குற்றப்பிரிவுக்கும், தக்கலை இன்ஸ்பெக்டர் சுதர்சன், பசுவந்தனை போலீஸ் நிலையத்திற்கும், கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் குலசேகரப்பட்டினத்திற்கும், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குற்றாலம்
தூத்துக்குடி கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் நிலையத்திற்கும், தேனி மாவட்டம் பி.சி.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன கலா நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், சென்னை எழும்பூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், கடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவுக்கும், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தாமஸ் குற்றாலம் போலீஸ் நிலையத்திற்கும், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் முருகன் அருமனை போலீஸ் நிலையத்திற்கும், மதுரை ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கடையம் போலீஸ் நிலையத்திற்கும், மதுரை கண்ட்ரோல் ரூம் சேசு ராஜசேகரன் புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கும், கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், ராமநாதபுரம் சி.ஐ.டி. பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், கரூர் வேப்பமூடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தக்கலை போலீஸ் நிலையத்திற்கும், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்திற்கும், திருச்சி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.பிரவேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story