பழங்குடியினர் 50 பேருக்கு சாதி சான்றிதழ்;பத்மநாபபுரம் சப்-கலெக்டர் வழங்கினார்
பழங்குடியினர் 50 பேருக்கு சாதி சான்றிதழை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் வழங்கினார்.
குலசேகரம்,
பழங்குடியினர் 50 பேருக்கு சாதி சான்றிதழை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் வழங்கினார்.
சாதி சான்றிதழ்
பேச்சிப்பாறை, சுருளகோடு, பொன்மனை, பெருஞ்சாணி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட மலைவாழ் காணி பழங்குடி மக்களில் பலருக்கு சாதி சான்றிதழ்கள் கிடைக்காத நிலை இருந்து வருகிறது. இதற்கான விண்ணப்பம் செய்தவர்களுக்கு வருவாய்த்துறையினர் ஒரே இடத்தில் அமர்ந்து விண்ணப்பங்களை பரிசீலனை செய்து சாதி சான்றிதழ்கள் வழங்கும் முகாம் பேச்சிப்பாறை ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை கலந்து கொண்டு 50 காணி பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருவட்டார் தாசில்தார் தினேஷ் சந்திரன், பேச்சிப்பாறை கிராம அலுவலர் நித்தியானந்தன், ஊராட்சி தலைவர் தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story