நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்து விட்டார்
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலையில் நாகர்கோவில் பஸ்கள் நிறுத்தப்படும் பிளாட்பாரம் பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதற்குள் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபினேசர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-------------------
Related Tags :
Next Story