பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயார்


பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயார்
x
தினத்தந்தி 24 April 2022 2:23 AM IST (Updated: 24 April 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது

நெல்லை:
கொரோனா பரவலால் உலக நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்தன. இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை கல்வி நிலையத்தில் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சுகாதார பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ளன. அங்கேயே ஆக்சிஜன் உற்பத்திக்கூடமும் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

Next Story