தென்காசி அருகே பயங்கரம்: வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
தென்காசி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்
தென்காசி:
தென்காசி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கோழிப்பண்ணை உரிமையாளரின் மகன்
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை புது கிணற்று தெருவைச் சேர்ந்தவர் குளத்தூரான். இவர் அய்யாபுரம் ெரயில்வே கேட் அருகே கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவருடைய மகன் மாரிச்செல்வம் (வயது 20). இவர் கோழிப்பண்ணையில் தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார்.
அய்யாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த இசக்கி மகன் சரவணன். இவர் டிப்பர் லாரிகள் வைத்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிச்செல்வம் குடிபோதையில் சரவணனுக்கு சொந்தமான ஒரு லாரியை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று மதியம் மாரிச்செல்வம் அய்யாபுரத்தில் உள்ள குளத்தின் கரையில் ேமாட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரவணனுக்கும், மாரிச்செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் மாரிச்செல்வத்தை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மாரிச்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சரவணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
கொலையாளிக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த மாரிச்செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரவணனை வலைவீசி தேடி வருகிறார்கள். கோழிப்பண்ணை உரிமையாளரின் மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story