கல்விக்கடனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் வங்கியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை


கல்விக்கடனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் வங்கியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 24 April 2022 3:31 AM IST (Updated: 24 April 2022 3:31 AM IST)
t-max-icont-min-icon

கல்விக்கடனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வங்கியாளர்களுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.

சேலம், 
ஆய்வு கூட்டம்
சேலம் தொங்கும் பூங்காவில் உள்ள மாநகராட்சி கூட்டரங்கில் மாவட்ட அளவிலான முதல் காலாண்டுக்குரிய வங்கிகளுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ், ரா.அருள் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்த கூட்டத்தில் வங்கியாளர்களிடம் வங்கிக்கடன் வழங்குவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்து கேட்கப்பட்டன.
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் ேபசும் ேபாது, சேலம் மாவட்டத்தில் 492 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் வங்கிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
கல்விக்கடன்
ஆர்வமுடன் தொழில் தொடங்க வரும் தொழில்முனைவோர்கள், கல்விக்கடன் கேட்டு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் வங்கிக் கடன் கேட்டு வங்கிகளுக்கு வருபவர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டியது வங்கியாளர்களின் கடமையாகும். வங்கியாளர்கள் கல்விக்கடனுக்கு முன்னுரிமை கொடுத்து கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளும் கல்வி கற்க உதவிட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கணேசன், முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் பாமா புவனேஸ்வரி, உதவி பொதுமேலாளர்கள் பெர்னான்டீஸ் (கனரா வங்கி), பாஸ்கரன் (இந்தியன் வங்கி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story