எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் செய்து நூதன ஆர்ப்பாட்டம்; திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் கியாஸ் சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் செய்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை உயர்வுக்கு பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோட்டில் நூதன போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கியாஸ் சிலிண்டர் அச்சிடப்பட்ட பேனரை பாடையில் கட்டி இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் ஷேக் அப்துல்லா, நகர செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர் ராஜ்கமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் இருந்து பட்டாசு வெடித்தபடி ஊர்வலம் தொடங்கி, பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு கட்சியினர் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சியின் நகர துணை செயலாளர் ஜான், மாவட்ட மாணவர் அணி துணைச்செயலாளர்கள் பிரதாப்குமார், சரவணன், ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story