மூதாட்டி பிணம்


மூதாட்டி பிணம்
x
தினத்தந்தி 24 April 2022 3:41 AM IST (Updated: 24 April 2022 3:41 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில்- கழுகுமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் சுமார் 70 வயதான மூதாட்டி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்த மூதாட்டி யார்?, அவர் எப்படி இறந்தார்?, உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story