கூடலூர் அருகே போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
கூடலூர் அருகே போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
கூடலூர்
கூடலூர் தாலுகா தேவர்சோலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தீஸ்வரன், போலீஸ்காரர் சிகாபுதீன் ஆகியோர் போலீஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள பதிவு எண் கொண்ட ஒரு காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் காரை பின்தொடர்ந்து சென்றனர். தொடர்ந்து தேவர்சோலை - பாடந்தொரைக்கு இடைப்பட்ட பகுதியில் காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய 2 வாலிபர்கள் போலீஸ்காரர் சிகாபுதீனை தாக்கினர். இதைத்தொடர்ந்து கூடுதல் போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜீஷாத் (வயது 24), அசில் (22) என தெரியவந்தது. பின்னர் தேவர்சோலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீஷாத், அசில் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story