கோத்தகிரியில் பைன் கோல்ட் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா


கோத்தகிரியில் பைன் கோல்ட் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா
x
தினத்தந்தி 24 April 2022 7:08 PM IST (Updated: 24 April 2022 7:08 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பைன் கோல்ட் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா நடந்தது.

கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் மஞ்சூரில் செயல்பட்டு வரும் பைன் கோல்ட் நிறுவனத்தின் நகைகடையின் புதிய கிளை கோத்தகிரியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிளையின்திறப்பு விழா  நடந்தது. விழாவுக்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சாஜன் ஜார்ஜ் தலைமை வகித்தார். தொழிலதிபர் போஜராஜன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, துணைத் தைலவர் உமாநாத், கவுன்சிலர் செல்வராணி, தி.மு.க ஒன்றிய செயலாளர் நெல்லைக் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எக்ஸ்போ செந்தில், பா.ஜ.க மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அன்பரசன் மற்றும் படுகர் நலச் சங்க தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பிரபல திரைப்பட நடிகை பூர்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய நகைக்கடையின் கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அவர் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். இதில் 10 பேர் குழுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Next Story