அன்று குப்பைக்கிடங்கு இன்று அழகிய பூங்கா


அன்று குப்பைக்கிடங்கு இன்று அழகிய பூங்கா
x
தினத்தந்தி 24 April 2022 7:08 PM IST (Updated: 24 April 2022 7:08 PM IST)
t-max-icont-min-icon

குளுகுளு குன்னூரில்....முகம் சுளிக்க வைத்த இடம், தற்போது அனைவரது முகம் மலரும் மலர் தோட்டமாக மாறி உள்ளது. அருகில் செல்ல தயங்கிய இடம், தற்போது அருகே சென்று அமர்ந்து விட்டு செல்ல வைக்கிறது. ஆமாங்க...அன்று குப்பை கிடங்கு. இன்றுஅழகிய பூங்காவாக காட்சி அளிக்கிறது.

கோத்தகிரி

குளுகுளு குன்னூரில்....முகம் சுளிக்க வைத்த இடம், தற்போது அனைவரது முகம் மலரும் மலர் தோட்டமாக மாறி உள்ளது. அருகில் செல்ல தயங்கிய இடம், தற்போது அருகே சென்று அமர்ந்து விட்டு செல்ல வைக்கிறது. ஆமாங்க...அன்று குப்பை கிடங்கு. இன்றுஅழகிய பூங்காவாக காட்சி அளிக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்த 30 வார்டுகளில் உள்ள குடியிருப்புக்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகள், நகராட்சிக்கு உட்பட்ட ஓட்டுப்பட்டரை வசம்பள்ளம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. 
இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வந்ததால், புதிய முயற்சியாக இந்த இடத்தின் ஒரு பகுதியை தூய்மைப்படுத்தி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கிளீன் குன்னூர் தன்னார்வ அமைப்பினர் நகராட்சியுடன் இணைந்து அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தினர்.

பூங்காவாக மாறியது

தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வண்ணங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மலர்கள் நடவு செய்யப்பட்டு, தற்போது அந்த இடம் புதிய பூங்காவாக மாறியுள்ளதுடன், வளம் மீட்பு பூங்காவாக திகழ்கிறது. 
கடந்த பிப்ரவரி மாதம் இங்கு மேரிகோல்டு, பேன்சி, காஸ்மோஸ், ஜெனியா, பிளக்ஸ் உட்பட பல்வேறு மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது. மக்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கும் உரம் அந்த மலர்செடிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது அந்த பூங்காவில் அழகிய பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. 

வளம் மீட்பு பூங்கா

ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரியில் மலர், பழம், காய்கறி கண்காட்சிகளுக்காக பல லட்சம் நாற்றுக்கள் தயார் செய்து பல வண்ண மலர்கள் பூத்து வரும் நிலையில், இவற்றிற்கு சவால்விடும் அளவிற்கு மக்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை பயன்படுத்தி அழகிய வண்ண மலர்கள் பூத்துள்ளது அனைவரின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
குன்னூரில் குப்பை கொட்டப்படும் இடத்திலும் சுற்றுச்சூழல் காக்கப்படவேண்டும் என்ற நோக்கில் பூங்கா அமைக்கப்பட்டது. குப்பை கொட்டும் தளத்தை அருவருப்பாக பார்த்து வந்தநிலை மாறி, அந்தப் பகுதி பூத்துக்குலுங்கும் மலர்ச் செடிகளால் ரசிக்கும் இடமாகவும் மாறி உள்ளது. தற்போது வளம் மீட்பு பூங்காவாக காட்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story