கூடலூர் அருகே அ.தி.மு.க கொடிக்கம்பம் சாய்ப்பு


கூடலூர் அருகே அ.தி.மு.க கொடிக்கம்பம் சாய்ப்பு
x
தினத்தந்தி 24 April 2022 7:08 PM IST (Updated: 24 April 2022 7:08 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே அ.தி.மு.க கொடிக்கம்பம் சாய்க்கப்பட்டது.

கூடலூர்

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிகொல்லியில் அதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் இருந்த அ.தி.மு.க. கொடி கம்பத்தை மர்ம ஆசாமிகள் சாய்த்து போட்டுள்ளனர். இதை அறிந்த அ.தி.மு.க.வினர் விரைந்து வந்தனர். பின்னர் தேவர்சோலை போலீசில் அவை செயலாளர் ராமகிருஷ்ணன் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறும்போது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே பகுதியில் நின்றிருந்த பா.ஜ.க கொடி கம்பத்தை யாரோ சாய்த்து போட்டுள்ளனர். பின்னர் சில தினங்கள் கழித்துஅ.தி.மு.க. கொடி கம்பத்தையும் சாய்த்துள்ளனர். பின்னர் மீண்டும் கொடிக் கம்பம் நடப்பட்டது. இந்தநிலையில் 2-வது தடவையாக அ.தி.மு.க. கொடி கம்பத்தை சாய்த்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.R

Next Story