தூத்துக்குடியில் ரூ 37 லட்சம் மோசடி வழக்கு: மேலும் ஒரு வாலிபர் சிக்கினார்
தூத்துக்குடியில் ரூ 37 லட்சம் மோசடி வழக்கில் மேலும் ஒரு வாலிபர் சிக்கினார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த திலீபன்ராஜ் மனைவி ஐஸ்வர்யா என்பவர் உள்பட 13 பேரிடம் போலியான முதலீடு நிறுவனத்தின் மூலம் ரூ.37 லட்சம் பணத்தை மோசடி செய்தது தொடர்பாக தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சங்கர் மகன் ரோஷன் (28), கேரளா மாநிலம் பாலக்காடு கரியம்பழா பகுதியை சேர்ந்த முகம்முது குஞ்சிசாலி மகன் முகம்மது சாகிப் உசைன் (25), பாலக்காடு போம்பரா பகுதியை சேர்ந்த ஜார்ஜ் மகன் ஜேம்ஸ் ஜார்ஜ் (25) ஆகிய 3 பேரையம் ஏற்கனவே கைது செய்தனர்.
மேலும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து 13 பேரின் வங்கி கணக்குகளை பெற்று பணம் மோசடியில் ஈடுபட உதவியாக இருந்த சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன் பிரேம்குமார் (29) என்பவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று பிரேம்குமாரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story