கோவையில் ரூ.28¼ லட்சத்துடன் சிக்கிய போக்குவரத்து இணை கமிஷனர் வாங்கி குவித்த சொத்துகள் எவ்வளவு என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விவரம் சேகரிக்கிறார்கள்


கோவையில் ரூ.28¼ லட்சத்துடன் சிக்கிய போக்குவரத்து இணை கமிஷனர் வாங்கி குவித்த சொத்துகள் எவ்வளவு என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விவரம் சேகரிக்கிறார்கள்
x
தினத்தந்தி 24 April 2022 7:56 PM IST (Updated: 24 April 2022 7:56 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் ரூ.28¼ லட்சத்துடன் சிக்கிய போக்குவரத்து இணை கமிஷனர் வாங்கி குவித்த சொத்துகள் எவ்வளவு என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விவரம் சேகரிக்கிறார்கள்


கோவை

கோவையில் ரூ.28¼ லட்சத்துடன் சிக்கிய போக்குவரத்து இணை கமிஷனர் வாங்கி குவித்த சொத்துகள் எவ்வளவு? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விவரம் சேகரிக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறை சார்பில் கூறப்பட்டதாவது

இணை கமிஷனர்

கோவை பாலசுந்தரம் சாலையில் மண்டல வட்டார இணை போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு இணை போக்குவ ரத்து கமிஷனராக பணியாற்றி வரும் உமா சக்தியின் கட்டுப்பாட்டில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் வருகின்றன.

இவர் ஆம்னி பஸ் அதிபர்கள், போக்குவரத்து பயிற்சி மைய உரிமையாளர்களிடம் மாதம் தோறும் மாமூல் வசூலிப்பதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு திவ்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

கத்தை கத்தையாக பணம்

இதற்கிடையே நேற்று முன்தினம் பல்வேறு நபர்களிடம் இருந்து மாமூல் பணத்தை வசூலித்து கொண்டு கோவை சவுரிபாளையம் கிருஷ்ணாவீதி வழியாக காரில் சென்ற இணை கமிஷனர் உமா சக்தியை லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான தனிப்படையினர் தடுத்து நிறுத்தி வழிமறித்தனர்.

பின்னர் உமாசக்தியின் காரை சோதனையிட்ட போது ரூ.500, ரூ.2 ஆயிரம் என கத்தை கத்தையாக ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். 

வழக்கு பதிவு

உடனே அதே காரில் அவரை கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் அவருடைய வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது

வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் உமா சக்தி வந்த காரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.38 லட்சத்து 35 ஆயிரம் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சொத்துகள் எவ்வளவு?

இதைத்தொடர்ந்து அவர் வாங்கி குவித்த சொத்துகள் எவ்வளவு? என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. அவருடைய வங்கி கணக்கு விவரங்களும் ஆய்வு செய்யப்பட உள்ளது. 

அவர் யார்? யாரிடம் மாமூல் வசூலித்தார். அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

 மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story