புதுவை, காரைக்காலில் 2-வது சுற்று வாக்குப்பதிவு


புதுவை, காரைக்காலில் 2-வது சுற்று வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 24 April 2022 8:22 PM IST (Updated: 24 April 2022 8:39 PM IST)
t-max-icont-min-icon

பிரான்ஸ் அதிபர் தேர்தலையொட்டி புதுவை, காரைக்காலில் இன்று நடந்த 2-வது சுற்று வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

பிரான்ஸ் அதிபர் தேர்தலையொட்டி புதுவை, காரைக்காலில் இன்று நடந்த 2-வது சுற்று வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
பிரான்ஸ் அதிபர் தேர்தல்
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வரும் இமானுவேல் மேக்ரானின் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து 12-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு 2 சுற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நதாலி ஆர்தாட், நிக்கோலஸ் டூபோன்ட், ஆன் ஹிடால்கோ, யானிக்ஜடோட், ஜீன்லஸ்ஸல், மரைன் லி பென் உள்பட 12 பேர் களமிறங்கினர்.
இதில் உலகம் முழுவதும் உள்ள பிரெஞ்சு குடிமை பெற்றவர்கள் வாக்களிக்க தகுதியானவர். இந்த தேர்தலில் புதுச்சேரி, தமிழகம், கேரளாவில் உள்ள 18 வயது நிரம்பிய பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 4 ஆயிரத்து 564 பேர் வாக்காளர்கள் ஆவர். 
இந்த தேர்தலில் முதல் சுற்று வாக்குப்பதிவு கடந்த 10-ந் தேதி நடந்தது. இதில் தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான இமானுவேல் மேக்ரான், இடதுசாரி வேட்பாளரான மரின் லி பென் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இவர்களில் யாருக்கும் 50 சதவீதம் என்ற பெரும்பான்மை கிடைக்கவில்லை.
2-வது சுற்று வாக்குப்பதிவு
இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் தேர்தல் விதிப்படி இன்று 2-வது சுற்று வாக்குப்பதிவு நடந்தது. புதுச்சேரி தலைமை செயலகம் அருகே உள்ள பிரெஞ்சு துணை தூதரகம், லிசே பிரான்சே பள்ளி ஆகிய 2 வாக்குச்சாவடிகள், காரைக்கால் மற்றும் சென்னையில் தலா ஒரு வாக்குச்சாவடி என 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 
இங்கு நேற்று காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் வாக்குரிமை உள்ளவர்கள் வரிசையில் நின்று பிரெஞ்சு குடியுரிமை ஆவணங்களை காண்பித்து வாக்களித்தனர். இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. வாக்குச்சாவடி மையங்களை பிரெஞ்சு துணை தூதர் லிசே டல்போர்ட் பரே பார்வையிட்டார்.
பதிவான வாக்குகள் அந்தந்த மையங்களில் எண்ணப்பட்டு, பிரான்ஸ் நாட்டுக்கு தெரிவிக்கப்படும். இதில் வெற்றி பெறுபவர் பிரான்ஸ் அதிபராக பதவியேற்பார்.

Next Story