15 இடங்களில் குத்தி வாலிபர் படுகொலை; பெங்களூருவில் பயங்கரம்
பெங்களூருவில் 15 இடங்களில் கத்தியால் குத்தி வாலிபரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
ஸ்கூட்டர் மோதியதால் தகராறு
பெங்களூரு கெங்கேரி உபநகரில் வசித்து வந்தவர் பரத் (வயது 24). இவர், நேற்று முன்தினம் இரவு கெங்கேரி பகுதியில் நடந்த கரக திருவிழாவை பார்க்க தனது நண்பருடன் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடைகளுக்கு முன்பாக பரத், அவரது நண்பர்கள் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதி வழியாக வந்த ஒரு ஸ்கூட்டர் பரத் மீது மோதியது. இதில், அவரது கையில் காயம் ஏற்பட்டது.
உடனே கோபம் அடைந்த பரத், ஸ்கூட்டரில் இருந்த மர்மநபரிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. பின்னர் பரத்தை, அவரது நண்பர்கள் சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்கள். இந்த நிலையில், நள்ளிரவில் கரக ஊர்வலத்தை பார்த்துவிட்டு பரத் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், பரத்தை வழிமறித்து கண்மூடித்தனமாக தாக்கினாா்கள்.
வாலிபர் குத்திக் கொலை
மேலும் அருகில் இருந்த கெங்கேரி ரெயில்வே பகுதிக்கு பரத்தை மா்மநபர்கள் இழுத்துச் சென்றார்கள். அங்கு வைத்து பரத்தை சரமாரியாக மர்மநபர்கள் குத்தினார்கள். இதில், பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அவரது உடலை ரெயில்வே தண்டவாளத்தில் போடுவதற்காக மாமநபர்கள் தூக்கி வந்தனர். அப்போது அங்கு ரெயில்வே ஊழியர் வந்ததால், பரத் உடலை வீசிவிட்டு மர்மநபர்கள் ஓடிவிட்டார்கள்.
தகவல் அறிந்ததும் சிட்டி ரெயில்வே போலீசார், ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு சிரிகவுரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பரத் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது பரத்தை 15 இடங்களில் கத்தியால் குத்தி மா்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது. ஸ்கூட்டர் மோதியதை தட்டி கேட்டதால் மர்மநபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என்று கருதுகின்றனர். இதுகுறித்து சிட்டி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறாா்கள்.
Related Tags :
Next Story