ஓசூரில் நர்சை தற்கொலைக்கு தூண்டிய தட்டச்சர் கைது
ஓசூரில் நர்சை தற்கொலைக்கு தூண்டிய தட்டச்சர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:
ஓசூர் தணிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி கல்பனா தேவி (வயது36). இவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த கல்பனா தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ஓசூர் அரசு மருத்துவமனையில் தட்டச்சராக பணியாற்றி வந்த சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வலந்திவலசு பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பவருக்கும் கல்பனா தேவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால், ரமேஷிடம் இருந்து கல்பனாதேவி தொடர்பை துண்டித்தார். ஆனால் ரமேஷ் தொடர்ந்து தொந்தரவு செய்ததால், கல்பனா தேவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ரமேசை, சிப்காட் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story