பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது
திருப்பரங்குன்றம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளிக்கூட மேற்கூரைசுவர் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விடுமுறையால் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப ்பள்ளிக்கூட மேற்கூரைசுவர் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விடுமுறையால் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
மழைநீர் கசிந்தது
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பெரிய ஆலங்குளம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப ்பள்ளி அமைந்து உள்ளது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளிக் கட்டிடத்தில் தட்டு ஓடு பதிக்கப் படாத நிலை இருந்து வந்தது. அதனால் மழை பெய்யும்போது மழைநீர் கசிந்து வகுப்பு அறைக்குள் தண்ணீர் தேங்கிவந்தது. இதனால் மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இதற்கு இடையே பள்ளி கட்டிடத்தின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தின் நாலாபுறமுமாக கீறல்கள் உருவாகி வெடிப்பு ஏற்பட்டது. பள்ளி கட்டிடத்தினை இடித்துவிட்டு உரிய இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டவேண்டும் என்று திருப் பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளரிடம் ஆசிரி யர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையே தொடர்ந்தது.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் கட்டிடத்தின் சில இடங்களில் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தது. இதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியர், ஆசிரியைகள் வலியுறுத்தி னார்கள்.
பாதிப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கட்டத்தின் நுழைவு வாயிலில் மேல்கூரை பகுதி முழுவதுமாக திடீரென்று இடிந்து சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் உயிர்சேதம் ஏற்படுமோ? என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் சுப்பையாவிடம் கேட்டபோது, ஆணையாளர், யூனியன் தலைவரிடம் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story