உலக புத்தக தின விழாவையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம்
உலக புத்தக தின விழாவையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
ஏரியூர்:
உலக புத்தக தின விழாவையொட்டி, ஏரியூர் அருகே உள்ள ராமகொண்ட அள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 70 மாணவ-மாணவிகளுக்கு உலக புத்தக தின விழாவையொட்டி, மருதம் நெல்லி தமிழ் இலக்கிய பேரவை சார்பில் திருக்குறள் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, மருதம் நெல்லி தமிழ் இலக்கிய பேரவை பொறுப்பாளர் நாகராஜ், தமிழ் ஆசிரியர் சுப்ரமணி, பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story