அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர்:
அரூர் பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிசுபாலன், மல்லிகா, மொரப்பூர் ஒன்றிய செயலாளர் தங்கராசு, பாப்பிரெட்டிப்பட்டி வட்ட செயலாளர் தனுஷன், மாவட்ட குழு உறுப்பினர் வஞ்சி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்.
Related Tags :
Next Story