தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்


தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 24 April 2022 10:12 PM IST (Updated: 24 April 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.

தர்மபுரி:
தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககம், தர்மபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா தர்மபுரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு முதல்நிலை நூலகர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். 2-ம் நிலை நூலகர் கோ.மாதேஸ்வரன் வரவேற்று பேசினார். வாசகர் வட்ட தலைவர் ராஜசேகரன், தலைமை ஆசிரியர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தகடூர் புத்தக பேரவை செயலாளர் டாக்டர் செந்தில் கலந்துகொண்டு உலக புத்தக தினத்தையொட்டி அமைக்கப்பட்ட புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் சிவப்பிரகாசம் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பேசினார். விழாவில் தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளி ஆசிரியைகள் மவுலின் மேரி, ருக்குமணி ஆகியோர் தலா ரூ.1,000 செலுத்தி நூலக பரவலாக இணைத்து கொண்டனர். மேலும் 50 பேர் நூலக உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான வாசகர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் 3-ம் நிலை நூலகர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Next Story