நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 24 April 2022 10:16 PM IST (Updated: 24 April 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே கல்பட்டு, காணை ஆகிய கிராமங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும், நெல் கொள்முதல் செய்வதில் எடையளவு சரியாக உள்ளதா, நெல் கொள்முதல் ரகங்கள் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான தேவையான இடவசதி உள்ளதா என்று பார்வையிட்டார்.

பாதுகாப்பாக வைக்க அறிவுரை

மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடாதவாறு பாதுகாப்பாக தார்ப்பாய்களை கொண்டு மூடி வைக்கவும், அதிகப்படியான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டால் உடனடியாக அவற்றை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்குழு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணப்பட்டுவாடா எவ்வாறு செய்யப்படுகிறது எனவும், நெல்லில் கற்கள், பதர்கள் இல்லாமல் நெல் மணிகளை தூற்றுமாறும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன் முறையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Next Story