சுகாதாரத்துறை பெண் அலுவலர் சங்க கூட்டம்


சுகாதாரத்துறை பெண் அலுவலர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 24 April 2022 10:21 PM IST (Updated: 24 April 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் சுகாதாரத்துறை பெண் அலுவலர் சங்க கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம், 

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அனைத்து பெண் அலுவலர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார். மாநில பிரசார செயலாளர் மணிமேகலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கிராம, பகுதி, சமுதாய செவிலியர்கள் 300 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் துணை சுகாதார நிலைய வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும், துணை சுகாதார நிலைய மின் கட்டணம், கிராம சுகாதார செவிலியரே தன் சொந்த பணத்தில் செலுத்தி வருவதால் அந்த தொகையை திருப்பித்தர வேண்டும், அரசு கிராம சுகாதார செவிலியருக்கு பதிவேடுகள் இதுவரை கொடுக்காதபோது விழுப்புரம் மாவட்டத்தில் 32 பதிவேடுகளை போடச்சொல்லி கிராம சுகாதார செவிலியர்களை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது, மே மாதம் 8-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு பதிலாக மே 7-ந் தேதி கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த அனுமதி வழங்குவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story