சிறப்பு கிராம சபை கூட்டம்


சிறப்பு கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 24 April 2022 10:27 PM IST (Updated: 24 April 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

சிங்கவரம், பில்லூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

செஞ்சி, 

செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிங்கவரம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஆர்.விஜயகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலூ, சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பராசக்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து சிறப்புரையாற்றினார்.

மேலும் சிங்கவரம் கிராமத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகள், சாலை பணிகள், வடிநீர் கால்வாய் பணிகள், மக்கும்குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்தல் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தொகுப்பு வீடுகளை பெற்ற பயனாளிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இதில் செஞ்சி தாசில்தார் பழனி, செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்க.ஏழுமலை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், சிங்கவரம் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், துணைத் தலைவர் சதீஷ்குமார், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் மற்றும் அனைத்து ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பில்லூர்

இதேபோல் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் பில்லூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்துக்கு டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோசப் கிறிஸ்துராஜ், நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், ஊராட்சி வளர்ச்சி குறித்தும் பேசப்பட்டது.  இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கேசவன், ஒன்றியக்குழு உறுப்பினர் முகிலன், ஊராட்சி மன்ற தலைவர் சித்திர சேனன், துணைத்தலைவர் ராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செ.புதூர் 

விக்கிரவாண்டி அடுத்த செ.புதூரில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் கதிரேசன், பணி மேற்பார்வையாளர் கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவி நிர்மலா தேவி அந்தோணி சாமி வரவேற்றார்.கூட்டத்தில் கிராம மக்கள் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல், கனிம வளங்களை பாதுகாத்தல், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தாம்பரம் 52-வது வார்டு கவுன்சிலர் பெரியநாயகம், ஊராட்சி துணைத்தலைவர் கில்பர்ட்ராஜ், தேவசகாயம், ஊராட்சி செயலர் ராஜா, வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். 

Next Story