மோசடி நபர்கள் மீது பொதுமக்கள் கல் எறிந்தால் பா.ஜனதாவுக்கு ஏன் வலிக்க வேண்டும்?- சஞ்சய் ராவத் கேள்வி
மோசடி நபர்கள் மீது பொதுமக்கள் கல் எறிந்தால் பா.ஜனதாவுக்கு ஏன் வலிக்க வேண்டும் என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
மும்பை,
மோசடி நபர்கள் மீது பொதுமக்கள் கல் எறிந்தால் பா.ஜனதாவுக்கு ஏன் வலிக்க வேண்டும் என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
என்ன வேலை?
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை பாடுவதாக கூறிய நவ்னீத் ரானா, ரவி ரானா கைது செய்யப்பட்டது, கிரித் சோமையா கார் மீது நடந்த தாக்குதல் குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-
ரவி ரானா, நவ்னீத் ரானா குறித்து மும்பை போலீசார் நடத்தும் விசாரணையில் கிரித் சோமையாவுக்கு என்ன வேலை?.
அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தால் அதற்கு காரணம் இருக்கும். மத்திய முகமைகள் எங்கள் தலைவர்களிடம் விசாரிக்கும் போது, காரணம் இருப்பதால் தான் விசாரணை நடக்கிறது என பா.ஜனதாவினர் கூறுவார்கள். போலீசாரை நம்ப வேண்டும். மும்பை போலீசார் ஒருபோதும் தவறான வழக்கு பதிவு செய்தது இல்லை.
துரோகிகள் மீது கல்வீச்சு
சில துரோகிகளின் மீது கல்வீச்சு நடக்கிறது. அவர் ஒரு பொய்க்காரர். எனவே அவரை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம். ஐ.என்.எஸ். விக்ராந்த்தை காப்பாற்றுவதாக நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்டவர், போலி சாதி சான்றிதழை சமர்ப்பித்து தேர்தலில் வெற்றி பெற்றவரை சந்திக்க சென்று இருக்கிறார். இதுபோன்றவர்கள் மீது பொதுமக்கள் கல் எறிந்தால், அது பா.ஜனதாவுக்கு ஏன் வலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story