வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 24 April 2022 10:39 PM IST (Updated: 24 April 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

 வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும்  வெளிமாநிலங்களுக்கு கடத்த இருந்த 25 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் , வாணியம்பாடி தாசில்தாருக்கு கிடைத்த தகவலின் பேரில், வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையிலான வருவாய் துறையினர், நகர போலீசார் பறிமுதல் செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story