சிறப்பு கிராம சபை கூட்டம்
சோழவித்யாபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
வேளாங்கண்ணி:
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு கீழையூர் அருகே சோழவித்யாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழ்செல்வம் தலைமை தாங்கினார்.கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன், நாகை ஊராட்சி துறை உதவி இயக்குனர் (தணிக்கை) மோகன், கீழையூர் தாசில்தார் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகைமாலி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 100 நாள் வேலைக்கான உறுப்பினர் அட்டையை வழங்கினார். வறுமை இல்லாத ஊராட்சி என்பது நிலைத்திருக்க கிராமத்தில் அனைத்து வயதினரும் உடல் நலத்துடனும், நலவாழ்வு வாழ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வீடுகளிலும் தரமான குடிநீர் வழங்கும் நிலையை உருவாக்க வேண்டும். அனைவரும் குடியிருக்க மலிவான, பாதுகாப்பான வீடுகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சரண்யா பன்னீர் செல்வம், ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story