தினத்தந்தி புகார் பெட்டி
மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டிகளில் கூறப்பட்டுள்ளது.
புயல் பாதுகாப்பு கட்டிடம் வேண்டும்
நாகை மாவட்டத்தில் வடக்குபொய்கை நல்லூரில் புயல் பாதுகாப்பு கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டதால் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இடித்து பல ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்பட வில்லை. எனவே பொதுமக்களின் நலனுக்காக புதிய புயல் பாதுகாப்பு கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-முத்தையன், வடக்குபொய்கைநல்லூர்.
புதிய தார் சாலை அமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா விளக்குடி கீழத்தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் சேதமடைந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் அந்த பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அந்த சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், சேறும்,சகதியுமான பாதையினால் வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், விளக்குடி.
Related Tags :
Next Story