முகையூரில் 27-ந்தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் அதிகாரி தகவல்


முகையூரில் 27-ந்தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 24 April 2022 10:49 PM IST (Updated: 24 April 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

முகையூரில் 27-ந்தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.


திருக்கோவிலூர், 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கண்டாச்சிபுரம் தாலுகா முகையூரில் வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதற்கு  விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

எனவே கண்டாச்சிபுரம் தாலுகாவில் உள்ள கிராம பொதுமக்கள் தங்களின் கோரிக்கை தொடர்பான மனுக்களை அந்தந்த கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் முகாமிற்கு முன்னதாகவோ அல்லது முகாம் அன்று கலெக்டரிடமோ மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story