கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம்
திண்டுக்கல்லில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திண்டுக்கல்:
கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் திண்டுக்கல்லில் நடத்தப்படும் மாவட்ட மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். நகர அமைப்பாளர் சக்திவேல், நிலக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் சந்திரன், வத்தலக்குண்டு ஒன்றிய அமைப்பாளர் பாக்கியம், அருள்வாக்கு பேரவை மாவட்ட அமைப்பாளர் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் வருகிற ஜூன் மாதம் மாவட்ட மாநாடு நடத்தப்பட உள்ளது.
இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநாட்டில் கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட பூசாரிகள் 4 ஆயிரம் பேருக்கு தற்போது ரூ.4 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனை 10 ஆயிரம் பேருக்கு வழங்க வேண்டும். கிராம கோவில் பூசாரிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி நலவாரியத்தில் இணைக்க வேண்டும்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள கோவில்களை அகற்றும் அரசு அதே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்களையும் அகற்ற முன்வரவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்றார். கூட்டத்தில் நிலக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story