திருவோண நட்சத்திரத்தையொட்டி பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடத்தில் சிறப்பு பூஜை

திருவோண நட்சத்திரத்தையொட்டி பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடத்தில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 24 April 2022 11:10 PM IST (Updated: 24 April 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

திருவோண நட்சத்திரத்தையொட்டி பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடத்தில் சிறப்பு பூஜை

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள திருஞானசம்பந்தர் மடத்தில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்திரத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. அதன்படி சிவகாமசுந்தரி உடனமர் நடராஜ பெருமானுக்கு நேற்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் நடராஜ பெருமான் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், சிவகாமசுந்தரி அம்பாள் தங்ககவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story