நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை


நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
x
தினத்தந்தி 24 April 2022 11:11 PM IST (Updated: 24 April 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல்:
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 26¼ டன் காய்கறி மற்றும் பழங்கள் சுமார் ரூ.8 லட்சத்துக்கு விற்பனையானது.
உழவா் சந்தை
நாமக்கல்- கோட்டை சாலையில் உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.
அந்த வகையில் நேற்று 21½ டன் காய்கறிகள் மற்றும் 4¾ டன் பழங்கள் என மொத்தம் சுமார் 26¼ டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.7 லட்சத்து 93 ஆயிரத்து 170-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 5,680 பேர் வாங்கி சென்றனர்.
விலை விவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.36-க்கும், கத்தரி கிலோ ரூ.28-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.36-க்கும், புடலங்காய் கிலோ ரூ.32-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.48- க்கும், பீட்ரூட் கிலோ ரூ.40-க்கும், கேரட் கிலோ ரூ.48-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.60-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.20-க்கும், இஞ்சி கிலோ ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்ன வெங்காயம் கிலோ ரூ.18-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.24-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து இருந்ததால், அவற்றின் விலை குறைந்து காணப்பட்டதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story