வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் செத்தது


வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் செத்தது
x
தினத்தந்தி 24 April 2022 11:11 PM IST (Updated: 24 April 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் செத்தது

சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே பொட்டணம் ஊராட்சியில் வருதம்பட்டி கருப்பனார் கோவில் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக 7-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியது. இதனால் ஆடுகள் அங்கேயே துடிதுடித்து செத்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதன் உரிமையாளரான பெரியசாமி அங்குள்ள வருவாய் துறையினரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.

Next Story