பூமியின் சுற்றளவை கணக்கிடும் நிகழ்ச்சி


பூமியின் சுற்றளவை கணக்கிடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 24 April 2022 11:17 PM IST (Updated: 24 April 2022 11:17 PM IST)
t-max-icont-min-icon

சூரியனின் நிழலை வைத்து பூமியின் சுற்றளவை கணக்கிடும் நிகழ்ச்சியில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தினர் பங்கேற்றனர்.

உடுமலை
சூரியனின் நிழலை வைத்து பூமியின் சுற்றளவை கணக்கிடும் நிகழ்ச்சியில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தினர் பங்கேற்றனர்.
பூஜ்ய நிழல் தினம்
பூஜ்ய நிழல் தினம் வருடத்திற்கு 2 நாட்கள் வருகிறது. அதாவது சூரியன் செங்குத்தாக 90 டிகிரியில் வரும்போது இந்த பூஜ்ய நிழல் ஏற்படுகிறது. இந்த பூஜ்ய நிழல் தினமானது கடந்த 17-ந் தேதியன்று உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உற்று நோக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை மற்றும் பெங்களூருவில் பூஜ்ய நிழல் தினமாகும். 
பூஜ்ய நிழல் தினத்தன்று, பூஜ்ய நிழல் ஏற்படும் ஊரிலும், பூஜ்ய நிழல் ஏற்படாத மற்றொரு ஊரிலும் சூரியனின் நிழலினை வைத்து, அதாவது உள்ளூர் நண்பகல் நேரத்தில் சூரியனின் நிழல் ஏற்படுவதை உற்றுநோக்கி கணக்கீடுகளின் மூலம் பூமியின் சுற்றளவையும், பூமியின் ஆரத்தையும் கண்டறியும் தேசிய அளவிலான நிகழ்வை நடத்த பெங்களூரு நேரு கோளரங்கம் கேட்டுக்கொண்டது. அதன் பேரில், பெங்களூரு, போபால் மற்றும் தமிழகத்தில் சென்னை பிர்லா கோளரங்கம், மதுரை, உடுமலை காந்தி நகரில் உள்ள கலிலியோ அறிவியல் கழகம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சூரியனின் நிழலினை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை உற்றுநோக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பூமியின் சுற்றளவை கணக்கிடுதல்
அப்போது நிழலை உற்று நோக்கி, அதன் கணக்கீடுகள் பெங்களூருவில் உள்ள நேரு கோளரங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பள்ளி மாணவர்களுக்கு, பூமியின் சுற்றளவை சூரியனின் நிழலை வைத்து எவ்வாறு நாம் கணக்கிட முடியும் என்பதை எளிதாக விளக்க முடியும் என்று கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கு.கண்ணபிரான் தெரிவித்தார்.
உடுமலை காந்தி நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர்கள் ஸ்ரீஹரி, சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற அறிவியல் செயல்பாடுகள் மூலமாக பல்வேறு வானியல் சார்ந்த கருத்துக்களை மாணவர்களிடமும், பொது மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே கலிலியோ அறிவியல் கழகத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் கு.கண்ணபிரான் தெரிவித்தார்.

Next Story