தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
கால்வாய் தூர்வாரப்படுமா?
தாழக்குடி சீதப்பாலில் கோதையாறு பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலம் விவசாயிகளும், பொதுமக்களும் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த கால்வாய் சரிவர தூர்வாரப்படாமல் செடி, கொடி வளர்ந்து காணப்படுகிறது. இதனால், கால்வாயை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக்கேயன், சீதப்பால்.
மின் விளக்கு எரிகிறது
மேலராமன்புதூர் திருக்குடும்ப ஆலய தெருவில் உள்ள மின் விளக்கு எரியாமல் இருந்தது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. பொதுமக்கள் வெளியே வர அச்சப்பட்டனர். இதுப்பற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்கை அகற்றிவிட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரிய வைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பம்
மார்த்தாண்டம்- உண்ணாமலைக்கடை சாலையில் முக்கிரான் குளத்தின் அருகே ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது. பெரும் காற்று வீசும் போது மின்கம்பம் சாய்ந்து சாலையில் செல்பவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோஸ்லின் பியர்சன், உண்ணாமலைக்கடை.
மின்கம்பம் சீரமைக்கப்படுமா
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் எப்போதும் வேண்டுமானாலும் சரிந்து விழுந்து சாலையில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாஹீர், குளச்சல்.
Related Tags :
Next Story