கணவருடன் சென்ற பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறிப்பு


கணவருடன் சென்ற பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறிப்பு
x
தினத்தந்தி 24 April 2022 11:18 PM IST (Updated: 24 April 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

கணவருடன் சென்ற பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆற்காடு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா மொரப்பந்தாங்கல் அடுத்த ஒண்டி குடிசை பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 27). இவர்கள் இருவரும் ஆற்காட்டில் அடகு வைத்துள்ள நகையை மீட்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்துள்ளனர். 

அப்போது ஆற்காடு அடுத்த உப்புப்பேட்டை சாலையில் வரும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் சிவரஞ்சனி கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடை பிடித்து இழுத்துள்ளார். 

இதில் தாலி சரடின் ஒருபகுதியான 2½ பவுன் மட்டும் மர்ம நபர் கையில் சிக்கி உள்ளது. அதனுடன் மர் நபர் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து சிவரஞ்சனியின் கணவர் சந்துரு ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Next Story