அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
பெரம்பலூரில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்,
தேசிய பஞ்சாயத்து ராஜ் (ஊராட்சிகள்) தினத்தையொட்டி தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் அந்தந்த ஊராட்சியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் 3 இலக்குகள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி முதல் இலக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான காற்று, நீர் நிறைந்த கிராமம் ஆகும். 2-வது இலக்கு சுத்தமான பசுமையான கிராமம் என்பது பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். 3-வது இலக்கு குழந்தைகள் நேய ஊராட்சி என்பது குழந்தைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதாகும்.
3 இலக்குகளை முறையாக மேற்கொண்டு சிறப்பான ஊராட்சியாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த 3 இலக்குகளையும் வருகிற 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அடுத்து வரக்கூடிய கிராம சபை கூட்டங்களில் எடுத்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை குறித்து பேசினர்.
Related Tags :
Next Story